அமெரிக்காவின் குளிர் காலம் மிக ஆடம்பரமாக வந்து சேர்ந்தது.உறைய வைக்கும் குளிர்.மரங்கள் இலைகளே வேண்டாம் என்று உதிர்த்து விட்டது.மழைக்கு குளிர் தாங்காமல் உறைந்து உறைந்து பனியாய்க் கொட்டியது.மைனஸ் பத்து டிகிரி குளிர் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது.உடலோடு சேர்ந்து மனதும் உறைந்தது.
எந்த வேலையும் செய்யப்பிடிக்காமல் அடம் பிடிக்கும் மனது.சோம்பேறித்தனமும் நானும் இரட்டையர்கள் ஆனோம்.எங்கும் எறிச்சல் எதிலும் எறிச்சல்.குளிரில் விறைத்த கைக்கால்க்ளைக் கொண்டு போய் அடுப்பில் வைக்கலா என்று தோணியது.காலை பதினோரு மணிக்குள் மூன்று டீ குடித்தாகியது.இருபதாயிரம் மைல் தாண்டி அடிக்கும் வெயிலை நினச்சு நினச்சு பொறாமைப்படுறேன். சுட்டெறிக்கும் மதுரை வெயில் எங்க போனதோ?
இந்த நேரத்தில் சில வேடிக்கை மனிதர்களின் நினைவு வருது. உறவினர் ஒருவர்,மதுரையில் இருக்கிற ஒரு துணிக்கடைக்கு போர்வை எடுத்து வருவார்;இன்னொருவர் வீட்டு ‘fridge'-ஐ துறந்தால் குளிருதுனு குறை கூறுவார்;இன்னொருவரோ இவர்களுக்கும் ஒரு படி மேல் போய், ‘fan' வேகமா சுத்துனா குளிருதுனு சொல்லுவார்.இவர்கள் இங்கு இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன்.

வீட்டை விட்டு கிளம்புவதை நினைக்கும் போது பள்ளி செல்ல அழும் குழந்தைப்போல் அழும் மனசு.வேறு வழியே இல்லை,கிளம்பியே ஆகணும்.பயந்து பயந்து வாசலைப் பார்க்கும் குழந்தையயைப் போல் நானும் இருந்தேன்.சாக்கு மூட்டை போன்ற ‘ஜாக்கெட்’டை போட்டாச்சு.கைக்கு க்ளவுஸ்,கால்களுக்கு பூட்ஸ்.
லேசான நடுக்கத்தோடு கதவை திறந்தேன்.முதலில் தலையை மட்டும் விட்டு எட்டிப்பார்த்தேன்,பிரகாசமாக சூரிய ஒளி வந்தது.அட, நல்ல வெயில்,பரவாயில்லையே என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்.தைரியம் வந்தது.கதவை முழுதாக துறந்து வேகமா வெளியே வந்து பார்த்தேன்.ஏமாற்றியது குளிர்.ஒரு பலத்த குளிர் காற்று வீசியதில் பிரபஞ்சமே ஒரு வினாடி உறைந்தது போல் உணர்ந்தேன்.இனி பனிக்காலம் முடியும் வரை அனுதினமும் இது தொடரும்.மதுரையும் வெயிலும் வெயிலில் செலுத்திய பொழுதுகளும் தரும் நினைவுகள்,உருகும் மெழுகை உருகாமல் தடுக்கிறது.
பனியில் உறையும் அனைத்து நண்பர்களுக்கு என் அன்பை அனுப்புகிறேன்.’HAPPY FREEZING'.

angu adikkum kularai enga kittaiyum share pannathuku nanri...gud post,realli made me freeze for a moment while reading :)
ReplyDelete@ vaishnavi,thank you..wish I could send some for you..:D
ReplyDelete