Monday, December 26, 2011

Kids and Christmas..God Give Me Strength

    Well,my kids started preparing their christmas list about 6 months back.The list of things that they needed kept on growing like a toe nail.Just like a toe nail,it never stopped growing and we had to keep on nipping it.Final decisions were made, a couple of days before christmas.My older one was the mastermind behind everything,and my younger one was his loyal right-hand man.They have had so many secret meetings,on what toys they wanted,how they are going to ask, who will be talking to mom and who will be talking to dad and so on.So the deal here was,mommy and daddy had to buy them each a toy for christmas eve(the night before christmas),santa has to buy them both a toy for christmas eve,then the same way for christmas day.So that's a total of four toys for each kid.I started to get dizzy for a while there.Thank god,he treated mommy and daddy as a single entity,for can you imagine that.


     I asked him,'Do you really want so many toys?' and I got an answer that shut my mouth,'Well!I am going to live as a kid for a longtime on this earth,that's why I need so many toys!'.Well,it kinda makes sense,but really?So now I am thinking ,where do I go from that answer.I couldn't find any logical answer at that moment,so I did what most parent does at this scenario,I stood straight,wiped the smile off my face,arched my eyebrows,looked at him straight into his eyes and asked him why his toys were lying on the floor and not cleaned up in a deep voice.Oh! They didn't see this coming.Then I started yelling for making such a mess with the toys and said there is going to be just one toy each for christmas and  they were happy mommy said one instead of none.So in the end the house got cleaned and daddy's purse got fat again.


One week later,
.
.
.
.
.
.
.
Well,mom and dad did get them both one gift each for christmas eve and christmas day,and santa did bring them the gifts that they had wanted, for christmas eve only.Mommy was able to save dad's purse with a relatively less damage by looking into sales and deals, using coupons,some mind tricks and stuff.In the end,the kids were very happy with their toys and played with them,well,for two hours.

Sunday, December 18, 2011

சாண்டா க்ளாஸ்


                  இங்கு ஊரெங்கும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் ஆரம்பம் ஆகிவிட்டது.மக்கள் வீடுகளை வண்ண வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்கிறார்கள்.எதிரே போய் மோதினால் கூட ‘மெர்ரி கிறிஸ்மஸ்’ என்று வாழ்த்துகிறார்கள்.கடைகளில் எல்லா பொருளிலும் ’என்னை இன்னுமா வாங்கவில்லை’ என்று சாண்டா க்ளாஸ் சிரித்துக்கொண்டிருக்கிறார்.

         என் பசங்களோட நட்பு வட்டத்தில் சாண்டா வருகையைப் பற்றிய பேச்சுக்கள் தான்.அவர்கள் பார்க்கும் சிறுவர் நாடகங்களில் எல்லாம் சாண்டா பரிசுகளோடு வரும் வழியில் ஆபத்தில் மாட்டிக்கொண்டு முழிப்பார்,டோரா-பூட்ஸ்,பபுள் கப்பீஸ்,ஊமி ஸூமி, எப்படி அவரையும் பரிசுகளையும் பத்திரமாக மீட்கிறார்கள் என்பது தான் கதை.

        ‘ஹொ!ஹொ!ஹொ! ’ என்று சொல்லிக்கொண்டே வெள்ளை தாடி,பெரிய தொப்பை,சிவப்புக் குல்லாய்,
ஒரு மூட்டை நிறைய பொம்மைகாளோடு, எட்டு ‘reindeer' பூட்டிய தேரில் அவர் ‘north pole'-ல் இருந்து கிளம்பி வருகிறார்.சேட்டை செய்யும் குழந்தைகளுக்கு எல்லாம் அவர் குடுக்க மாட்டார்  என்று கேள்விப் பட்டதில்
இருந்து என் வீட்டில் நல் ஒழுக்கம் பேணிக் காக்க படுகிறது.

          ஒரு நாள் சாயந்திரம் அப்பா, சாண்டா எனக்கு போன் பண்ணினாருனு சொன்னதில் இருந்து இன்னும் பயபக்தி கூடிவிட்டது.அப்பா உன்மைகளை சொல்லி விடக்கூடாதே என்ற டென்ஷன் வேறு. 'homework'-குகள் நான் சொல்லாமலே செய்யப்படுகின்றன.ஷூவும் சாக்ஸும் பத்திரமாக அதன் அதன் இடங்களுக்குச் செல்கிறது.அண்ணனும் தம்பியும் சண்டை போடும் போது ‘சாண்டா’ என்று சொன்னால்
பாச பறவைகளாக மாறி விடுகிறார்கள்.பிடிக்காத காய்களை எல்லாம் கஷ்டப்பட்டு சாப்பிட்டாச்சு.

           இப்படி,சாண்டா வருகைக்கு எங்கள் வீடு தயாராகிக்கொண்டிருக்கிறது. ’MERRY CHRISTMAS'

Tuesday, December 13, 2011

குளிர் காலம்

           அமெரிக்காவின் குளிர் காலம் மிக ஆடம்பரமாக வந்து சேர்ந்தது.உறைய வைக்கும் குளிர்.மரங்கள் இலைகளே வேண்டாம் என்று உதிர்த்து விட்டது.மழைக்கு குளிர் தாங்காமல் உறைந்து உறைந்து பனியாய்க் கொட்டியது.மைனஸ் பத்து டிகிரி குளிர் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது.உடலோடு சேர்ந்து மனதும் உறைந்தது.

          எந்த வேலையும் செய்யப்பிடிக்காமல் அடம் பிடிக்கும் மனது.சோம்பேறித்தனமும் நானும் இரட்டையர்கள் ஆனோம்.எங்கும் எறிச்சல் எதிலும் எறிச்சல்.குளிரில் விறைத்த கைக்கால்க்ளைக் கொண்டு போய் அடுப்பில் வைக்கலா என்று தோணியது.காலை பதினோரு மணிக்குள் மூன்று டீ குடித்தாகியது.இருபதாயிரம் மைல் தாண்டி அடிக்கும் வெயிலை நினச்சு நினச்சு பொறாமைப்படுறேன். சுட்டெறிக்கும் மதுரை வெயில் எங்க போனதோ?        
       
      இந்த நேரத்தில் சில வேடிக்கை மனிதர்களின் நினைவு வருது. உறவினர் ஒருவர்,மதுரையில் இருக்கிற ஒரு துணிக்கடைக்கு போர்வை எடுத்து வருவார்;இன்னொருவர் வீட்டு ‘fridge'-ஐ  துறந்தால் குளிருதுனு குறை கூறுவார்;இன்னொருவரோ இவர்களுக்கும் ஒரு படி மேல் போய், ‘fan' வேகமா சுத்துனா குளிருதுனு சொல்லுவார்.இவர்கள் இங்கு இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன்.       

         வீட்டை விட்டு கிளம்புவதை நினைக்கும் போது பள்ளி செல்ல அழும் குழந்தைப்போல் அழும் மனசு.வேறு வழியே இல்லை,கிளம்பியே ஆகணும்.பயந்து பயந்து வாசலைப் பார்க்கும் குழந்தையயைப் போல் நானும் இருந்தேன்.சாக்கு மூட்டை போன்ற ‘ஜாக்கெட்’டை போட்டாச்சு.கைக்கு க்ளவுஸ்,கால்களுக்கு பூட்ஸ்.

         லேசான நடுக்கத்தோடு கதவை திறந்தேன்.முதலில் தலையை மட்டும் விட்டு எட்டிப்பார்த்தேன்,பிரகாசமாக சூரிய ஒளி வந்தது.அட, நல்ல வெயில்,பரவாயில்லையே என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்.தைரியம் வந்தது.கதவை முழுதாக துறந்து வேகமா வெளியே வந்து பார்த்தேன்.ஏமாற்றியது குளிர்.ஒரு பலத்த குளிர் காற்று வீசியதில் பிரபஞ்சமே ஒரு வினாடி உறைந்தது போல் உணர்ந்தேன்.இனி பனிக்காலம் முடியும் வரை அனுதினமும் இது தொடரும்.மதுரையும் வெயிலும் வெயிலில் செலுத்திய பொழுதுகளும் தரும் நினைவுகள்,உருகும் மெழுகை உருகாமல் தடுக்கிறது.

     பனியில் உறையும் அனைத்து நண்பர்களுக்கு என் அன்பை அனுப்புகிறேன்.’HAPPY FREEZING'.