Sunday, December 18, 2011

சாண்டா க்ளாஸ்


                  இங்கு ஊரெங்கும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் ஆரம்பம் ஆகிவிட்டது.மக்கள் வீடுகளை வண்ண வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்கிறார்கள்.எதிரே போய் மோதினால் கூட ‘மெர்ரி கிறிஸ்மஸ்’ என்று வாழ்த்துகிறார்கள்.கடைகளில் எல்லா பொருளிலும் ’என்னை இன்னுமா வாங்கவில்லை’ என்று சாண்டா க்ளாஸ் சிரித்துக்கொண்டிருக்கிறார்.

         என் பசங்களோட நட்பு வட்டத்தில் சாண்டா வருகையைப் பற்றிய பேச்சுக்கள் தான்.அவர்கள் பார்க்கும் சிறுவர் நாடகங்களில் எல்லாம் சாண்டா பரிசுகளோடு வரும் வழியில் ஆபத்தில் மாட்டிக்கொண்டு முழிப்பார்,டோரா-பூட்ஸ்,பபுள் கப்பீஸ்,ஊமி ஸூமி, எப்படி அவரையும் பரிசுகளையும் பத்திரமாக மீட்கிறார்கள் என்பது தான் கதை.

        ‘ஹொ!ஹொ!ஹொ! ’ என்று சொல்லிக்கொண்டே வெள்ளை தாடி,பெரிய தொப்பை,சிவப்புக் குல்லாய்,
ஒரு மூட்டை நிறைய பொம்மைகாளோடு, எட்டு ‘reindeer' பூட்டிய தேரில் அவர் ‘north pole'-ல் இருந்து கிளம்பி வருகிறார்.சேட்டை செய்யும் குழந்தைகளுக்கு எல்லாம் அவர் குடுக்க மாட்டார்  என்று கேள்விப் பட்டதில்
இருந்து என் வீட்டில் நல் ஒழுக்கம் பேணிக் காக்க படுகிறது.

          ஒரு நாள் சாயந்திரம் அப்பா, சாண்டா எனக்கு போன் பண்ணினாருனு சொன்னதில் இருந்து இன்னும் பயபக்தி கூடிவிட்டது.அப்பா உன்மைகளை சொல்லி விடக்கூடாதே என்ற டென்ஷன் வேறு. 'homework'-குகள் நான் சொல்லாமலே செய்யப்படுகின்றன.ஷூவும் சாக்ஸும் பத்திரமாக அதன் அதன் இடங்களுக்குச் செல்கிறது.அண்ணனும் தம்பியும் சண்டை போடும் போது ‘சாண்டா’ என்று சொன்னால்
பாச பறவைகளாக மாறி விடுகிறார்கள்.பிடிக்காத காய்களை எல்லாம் கஷ்டப்பட்டு சாப்பிட்டாச்சு.

           இப்படி,சாண்டா வருகைக்கு எங்கள் வீடு தயாராகிக்கொண்டிருக்கிறது. ’MERRY CHRISTMAS'

No comments:

Post a Comment